Advertisment

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்லாம் மார்கத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் தங்கள் மதகோட்பாட்டுக்கு உட்பட்ட ஆடைகளை கல்வி நிலைய வளாகத்தினுள் அணிய தடை விதிக்கப்பட்டது. இவ்விவகாரம் நாடு முழுவதும்பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கல்வி நிறுவனத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் தங்கள் கண்டன குரல்களை எழுப்பிவருகின்றனர். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து சென்னை அரங்கநாதன் சுரங்கப் பாதை அருகே ‘எனது உடை எனது உரிமை’ என்ற கருத்தை முன்வைத்துஆர்ப்பாட்டம் நடத்தினர்.