Advertisment

'என் ஆசீர்வாதம் எப்போதும் என் பிள்ளைக்கு உண்டு' - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பதில்!

'My blessings are always to my son' - Director SA Chandrasekhar's reply

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் நிகழ்வுகளுக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். விரைவில் பிரம்மாண்ட அரசியல் மாநாடு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் காஞ்சிபுரத்தில் உள்ள காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். சாமி தரிசனத்திற்கு பிறகு வெளியே வந்தவரை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

Advertisment

கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளர், 'சார் ரொம்ப நாள் கழிச்சு, ரொம்ப வருஷம் கழிச்சு காஞ்சிபுரம் வந்திருக்கீங்க. உங்க மகன் கட்சி ஆரம்பித்திருக்கிறார். இது தொடர்பாக என்ன சொல்ல நினைக்கிறீங்க' என கேட்டார். அதற்கு, ''என்னுடைய வாழ்த்துகள், என்னுடைய ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் என் பிள்ளைக்கு எப்பொழுதும் உண்டு'' என்றார்.

உங்களுக்கு ஆரம்பத்தில் அரசியல் கட்சியில் ஈடுபாடு இருந்தது. இப்பொழுது உங்களுக்கு ஈடுபாடு இல்லை என்று சொல்கிறார்களே, கடல் போன்றது அரசியல், அதில் எப்படி விஜய் நீந்தி வருவார்' என கேள்விகள் எழுப்ப, 'கோவிலுக்கு வந்திருக்கிறேன்' என சொல்லிவிட்டு எஸ்.ஏ.சந்திரசேகர் கிளம்பினார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe