Advertisment

'கல்விக்காக அக்கறையோடு செயல்படும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு'-தமிழக முதல்வர் நெகிழ்ச்சி  

nn

சென்னையில் இன்று சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சார்பில் பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிவகுமார், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நடிகர் சூர்யா பெற்றோரை இழந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு நடிகர் சூர்யா தனது அகரம் அறக்கட்டளையின் மூலம் கல்வி உதவித் தொகையை வழங்கினார்.

Advertisment

nn

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், 'ஏழை எளிய மக்களின் கல்விக்காக தொடர்ந்து அக்கறையோடு செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு எனது பாராட்டு. சட்டத் தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணிபுரிவது இவை பயிற்சி செய்வது. ஓய்வுபெற்ற நீதியரசர்சந்துருவை இயக்குநராகக் கொண்ட சத்திய அகாடமியை தொடங்கி வைத்தேன். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இந்த அகாடமி மூலம் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன். ஜெய் பீம் படத்துக்கு பிறகு நீதியரசர் சந்துருவுடன் சமூக அக்கறையோடு செயல்பட்டு வரும் சூர்யா, ஞானவேலுக்கு எனது பாராட்டு' என தெரிவித்துள்ளார்.

Advertisment

education actor suriya
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe