
மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையரின் சிலைக்கு இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட கழக சார்பில் 23/5/2021 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் தலைமையில் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநில நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)