Advertisment

'பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல அதிமுக...' -முத்தரசன் விமர்சனம் 

Mutharasan

‘பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல’ அதிமுக சிக்கிக் கொண்டது என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தற்பொழுது விமர்சித்துள்ளார்.

Advertisment

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூபதிலளித்ததிலிருந்து,பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

Advertisment

அதேபோல் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபாஜக துணைதலைவர் வி.பி.துரைசாமி, மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் இனி தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என கூறியிருந்தார். அன்று மாலையே பெரம்பலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் முருகன், அதிமுக பாஜக கூட்டணியில்தான் உள்ளது எனக் கூறியிருந்தார்.

இப்படி இருக்க, இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முத்தரசன் ''பாம்பின் வாயில் சிக்கிய தவளை போல அதிமுக சிக்கியுள்ளது''என விமர்சித்துள்ளார்.

admk communist party
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe