Advertisment

கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற அரசே உதவித் தொகை உடனே வழங்கு...!.- சி.பி.ஐ. முத்தரசன் வேண்டுகோள்

தொழில் மற்றும் சமூக பாதுகாப்பை, மத்திய, மாநில அரசுகள் அவசியமாப் உறுதி செய்திடல் வேண்டும்"என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மேலும் அவர் கூறுகையில் "கரோனா வைரசை கட்டுப்படுத்திடவும், முற்றாக ஒழிக்கவும் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்திற்கும், பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர், வழங்கிட வேண்டும்.

Advertisment

mutharaerasn report

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கரோனாவை முற்றாக அழிக்க உலகம் கண்டறிந்துள்ள ஒரே மாமருந்து மக்கள் ஓர் இடத்தில் கூடக் கூடாது. இதனைத் தவிர்த்து வேறு வழி இல்லை. இதனை உறுதிப்படுத்திடும் வகையில் 22 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை முழுவதும் ஊரடங்கு உத்தரவாக மக்கள் தங்களுக்கு தாங்களே உத்தரவு பிறப்பித்துக் கொண்டு வீட்டில் இருந்திடல் வேண்டும் என்ற பிரதமரின் வேண்டுகோள் ஏற்று, தமிழகத்தில் பேருந்துகள் இயங்காது, மெட்ரோ ரயில் இயங்காது என்று முதல்வர் அறிவித்துள்ளார். வணிக நிறுவனங்கள் மூடப்படும் என்று வணிக சங்கங்கள் அறிவித்துள்ளன. ஞாயிற்றுக் கிழமை கொரணாவிற்கு எதிரான முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடைபெற உள்ளது.

Advertisment

இது நாளை ஒரு நாள் மட்டும் அல்ல, இதற்கு நிரந்தர தீர்வு எட்டப்படும் வரை மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நிலையும் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இந்தநிலையில் சிறு, குறு தொழில்கள் மட்டுமல்ல, பெரும் தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பொருளாதார மந்த நிலை, தொழில்கள் மூடல், வேலையின்மை அதிகரிப்பு, வாங்கும் சக்தி குறைவு என்ற நிலையில் கொரோனாவின் காரணமாக இவைகள் மேலும் அதிகரித்து மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றை மத்திய, மாநில அரசுகள் உணராமல் இருக்க இயலாது.

பாதிப்பில் இருந்து தொழில்களை பாதுகாக்க, தொழிலாளர்களை பாதுகாக்க அன்றாடம் காய்ச்சிகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இதுவரை ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் நடவடிக்கைகள் எதனையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளாமல் இருப்பது மிகுந்த கவலை அளிக்கின்றது.

விவசாயம், விவசாயம் சார்ந்த கோழி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள், சிறு, குறு தொழில்கள், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை தொழில் வணிகம் என அனைத்தும் வங்கிகள் மூலம் கடன் பெற்றும், இத்தகைய கடன் வசதிகளை பெற இயலாதவர்கள் தனியாரிடத்தில் கடன் பெற்றும் தொழில்கள் நடத்தி வருகின்றனர். இவைகள் அனைத்தும் முடங்கிப் போய் விட்ட நிலையில் தொழில்களை காப்பாற்ற கடன் மற்றும் வட்டிகளை தள்ளுபடி செய்திட அரசு உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

தொழிலாளர்கள், அமைப்பு சாராத் தொழிலாளர்கள், அன்றாட கூலித் தொழிலாளர்களை காப்பாற்ற உதவித் தொகைகள் உடனடியாக வழங்கிட வேண்டும்.மேற்கண்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு தொழில் மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்றார்.

Tamilnadu govt corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe