திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடான பழனியில் இருக்கும் பழனியாண்டவர் கலை பண்பாட்டு கல்லூரியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று (24-08-24) தொடங்கியது. இந்த மாநாடு, இரண்டு நாள் மிகவும் விமர்ச்சியாக நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார், பழனி பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம்உள்பட ஆதீனங்களும் முக்கிய பிரமுகர்களும் கண்காட்சிகளை பார்வையிட்டனர்.