Advertisment

'படையென திரள வேண்டும்'-தொண்டர்களுக்கு திமுக தலைவர் மடல்

nn

திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க அக்கட்சியின் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

திமுகவை தோற்றுவித்த அண்ணா பிறந்தநாள் மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாள், திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் என முப்பெரும் விழாவை திமுக கொண்டாட உள்ளது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி திமுகவின் பவள விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அழைப்பு மடலில், 'திராவிட மாடல் என்பது இந்திய மாநிலங்கள் பின்பற்றும் கோட்பாடாக மாறி வருகிறது. தெற்குதான் வடக்கிற்கு வழிகாட்டுகிறதுஎன்ற அளவுக்கு திமுகவின் கொள்கை தாக்கம் பேசப்பட்டு வருகிறது. செப்டம்பர் 17 நடைபெறும் திமுகவின் பவள விழாவில் தொண்டர்கள் படையென திரள வேண்டும். திமுகவை உருவாக்கிய அண்ணாவும் பாதுகாத்து வளர்த்த கலைஞரும் நம்மை அழைக்கிறார்கள். திமுக என்ற ஜனநாயக பேரியக்கம் என்றென்றும் தமிழையும்தமிழர்களையும் காக்கும் இயக்கம் அல்லவா? இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் அமர்ந்து இந்திய மக்களை பேராபத்திலிருந்து காத்து நிற்கிறது' என தெரிவித்துள்ளார்.

kalaingar Anna
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe