Advertisment

“நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞராக இருக்க வேண்டும்” - முதல்வர் ஸ்டாலின் 

Must be a champion of justice - Chief Minister Stalin

“உங்கள் கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞராக இருந்தாலும், நீதிக்குவெற்றி தேடித் தரும் வழக்கறிஞராகவும்இருக்க வேண்டும்” எனடாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழா ஆண்டு கல்வெட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

Advertisment

வெள்ளிவிழா கல்வெட்டை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “அரசு சார்பில் கலைஞருக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பூம்பொழில் இல்லம். அதே கால கட்டத்தில் சட்டப் பல்கலைக்கழகம் நிறுவ வேண்டிய அவசரம் இருந்தது. இனிமேல் ஓர் இடம் பார்த்து கட்டடம் கட்டி பல்கலைக்கழகம் திறக்க நாட்களாகும் என்பதால் தான் குடியேற இருந்த பூம்பொழில் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகமாக மாற்ற உத்தரவிட்டார்.

சட்ட புத்தகங்களைத்தாண்டி இந்த சமூகத்தையும் பாடமாக படிக்க வேண்டும். நாட்டின் அரசியல் போராட்டமாக இருந்தாலும், சட்ட போராட்டமாக இருந்தாலும் அதில் முன் நின்று கடமை ஆற்றியவர்கள் வழக்கறிஞராகத்தான் இருக்கிறார்கள். உங்கள் கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞராக இருந்தாலும் நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞராக இருக்க வேண்டும் " எனக் கூறியுள்ளார்

kalaingar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe