Muslims pray for heavy rain and special prayer

கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி சிங்காரத்தோப்பு தெருவில் உள்ள டி.என்.டி.ஜே பள்ளியில் இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

Advertisment

தமிழ்நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும், மஞ்சள் அலர்ட் விடுத்த நிலையில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், பயிர்கள் செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் என அனைத்து தரப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Advertisment

இந்த நிலையில் மழை வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். டி.என்.டி.ஜே மாவட்ட சொற்பொழிவாளர் ஷஜீர் தலைமையில் சட்டையை திருப்பி அணிந்து சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில், டி.என்.டி.ஜே பள்ளி நிர்வாகிகள் முஸ்தபா, ஹனிபா உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்