Advertisment

நெருங்கும் ரம்ஜான்; புத்தாடை, பொருட்களை வாங்க குவிந்த இஸ்லாமிய மக்கள்

Muslim people showed interest in buying new clothes ahead Ramadan

Advertisment

உலகெங்கமுள்ள இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகை இந்த பண்டிகையொட்டி இஸ்லாமிய பெருமக்கள் ஒரு மாதம் அதிகாலைப் பொழுதில் இருந்து நோன்பு இருந்து இறைவனை வணங்குவது வழக்கம் கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்து வரும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை நெருங்குவதை ஒட்டி தங்களுடைய குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் புத்தாடை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்பு கார வீதியிலும், நேதாஜி சாலை மற்றும் ஓ.வீ ரோட்டில் உள்ள துணிக்கடைகளிலும் காலனி கடைகள் கவரிங் நகை கடைகளில் குடும்பத்துடன் வந்து காலணி மற்றும் வாசனைத் திரவியங்களையும் வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பாகவும் இருந்தது. மேலும் சாலை ஓரமாக உள்ள கடைகளில் உணவு பொருட்கள்,சுடிதார் வகைகள் கவரிங் நகைகள் குறைந்த விலையில் விற்பதால்பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் நெரிசல் அதிகமாகி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

muslims TIRUPATTUR Ramzan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe