muslim fasting event AIADMK Trichy

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நேற்று, அதிமுக மாநகர் மாவட்டத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளரும்திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ. சீனிவாசன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தார்.

Advertisment

ஊரடங்கு, ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரிவு மற்றும்மாநகர் மாவட்டச் செயலாளர் இல்லாதது போன்ற காரணத்தினால் கடந்த ஐந்து வருடங்களாக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்தது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைப்பு செயலாளர் தங்கமணி ஆகியோரிடம் உரிய அனுமதி பெற்று, நேற்று மாலை அதிமுகவினர்அனைவரையும் ஒன்று திரட்டி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்து ஜெ.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், இப்ராஹிம்ஷா, மாவட்ட அவைத் தலைவர் ஐயப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பத்மநாதன், வனிதா, பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, அன்பழகன், சுரேஷ்குப்தா, நாகநாதர் பாண்டி, கலைவாணன் பூபதி, திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி நிர்வாகிகள் ராஜேந்திரன், தொழிலதிபர் என்ஜினியர் வெல்லம்ஷா, கன்னியப்பன், தர்கா கஜா,கல்லுக்கு முருகன், பொன். அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, ரவீந்திரன், சிந்தை ராமச்சந்திரன், தில்லை முருகன், இன்ஜினியர் ரமேஷ், ரோஜர், நாட்ஸ் சொக்கலிங்கம், பாலாஜி, வரகனேரி சதீஷ், டைமண்ட் தாமோதரன், ஏடத்தெரு கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.