ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மங்கல இசைக் கலைஞர்களுக்கு 5000 ரூபாய் நிதியுதவி வழங்கக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

musicians coronavirus lock down chennai high court

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு, 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை அறக்கட்டளை நிறுவன தலைவர் குகேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும், தங்கள் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்கக் கோரி அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.இந்த மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.