ar rahman twit

Advertisment

அண்மையில் நேர்காணல் நிகழ்ச்சிஒன்றில் இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான், ஹிந்தி படங்களில் தனது வாய்ப்பைதடுப்பதற்காக ஒரு கூட்டமே இயங்கி வருவதாக கூறியிருந்தார். இந்த கருத்துபல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், விவாதப்பொருளாகவும் உருவெடுத்தது. ஏ.ஆர்.ரகுமானின் இந்த கருத்துக்கு கவிஞர்வைரமுத்து, பாலிவுட்டில் பெண்மானுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் போலஆண்மானுக்குவாய்ப்பு கிடைப்பதில்லை எனகவிதைநடையில்ஆதரவுகருத்துதெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்பொழுதுஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் கருத்துஒன்றை தெரிவித்துள்ளார்.அதில், இழந்த பணத்தை மீட்டுவிடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம், ஆனால் இழந்த நேரம் திரும்ப வராது. அமைதியாககடந்து செல்வதே சிறந்தது. நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன எனபதிவிட்டுள்ளார்.