
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக்குறைவு மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக இன்று மாலைக்குள் மருத்துவமனை நிர்வாகம்தரப்பில் அறிக்கை வெளியாகலாம். அதன் பின்னரேமுழு தகவல் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)