Advertisment

திருவாரூரில் மறைந்த திமுக தலைவர் கலைஞருக்கு மணிமண்டபம் !!

திருவாரூரில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

Advertisment

museum for karunanidhi

முன்தினம் இரவு திருச்சி வழியாக திருவாரூர் வந்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், சன்னதி தெருவில் உள்ள அவரது அத்தை வீட்டில் தங்கினார்.இன்று (நேற்று)காலை நடைபயிற்சியை திருவாரூரில் உள்ள நான்கு வீதிகளிலும் வந்தார் அவரோடு முன்னாள் அமைச்சர் ஏ,வ,வேலும் சென்றார். பிறகு திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியிலுள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து திருவாரூர் வரும் வழியில் பவித்திரமாணிக்கம் பகுதியில் பிரபாகரன் ரஞ்சனி தம்பதிகளின் குழந்தைக்கு கண்மணி என பெயர் சூட்டினார். தொடர்ந்து கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ள இடத்தை திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்தார். முதற்கட்டமாக ஆறு நபர்களிடம் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தை வாங்கி பத்திரபதிவை செய்துள்ளனர்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,’’திருவாரூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் கலைஞரின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அருங்காட்சியம் அமைக்கப்படும். இந்த அருங்காட்சியம் அவருடைய இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் திறப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்’’. என்றவர்

Advertisment

மேலும் நீட் விவகாரத்தில்."நீட் தேர்வு தேவை வேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. மேலும் நீட் தேர்வு முறைகேட்டில் தமிழக அரசுக்கு கீழ் உள்ள சிபிசிஐடி விசாரணை வெறும் கண்துடைப்பு மட்டுமே. இந்த சிபிசிஐடி விசாரணையில் நியாயம் கிடைக்காது. மேலும் நீட் தேர்வில் தரகர்கள் மற்றும் பல மாநில அதிகாரிகள் சம்பந்தப்பட்டு உள்ளதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதோடு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவ கருவிகள் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளிவருகின்றன.அதனை கைவிட வேண்டும்.’’ என கூறினார்.

karunanitni Tiruvarur stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe