Published on 09/02/2023 | Edited on 09/02/2023

அண்மையில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மெரினா கடற்பகுதியில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பான கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு கருத்துக்களும் ஆதரவு கருத்துக்களும் வெளியாகி இருந்தன. தொடர்ந்து அனைத்து தரப்பின் அனுமதி கிடைத்த பிறகே பேனா சின்னம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அதேபோல் கலைஞரின் நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது. 80 லட்ச ரூபாய் மதிப்பில் கலைஞர் நினைவிட வளாகத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.