இன்று திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
நீட் தேர்வேவேண்டாம் என்பதே திமுகவின் நிலைப்பாடு. நீட் ஆள்மாறாட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தொடர்புள்ளது. இந்த முறைகேட்டில் வெளிமாநில தகர்களுக்கும் தொடர்புள்ளதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு பதிலாக சிபிஐ விசாரிக்கவேண்டும். சிபிசிஐடி தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இயங்கும் எனவே அரசின் தலையீடு இல்லாதபடி இந்த விசாரணை இருக்க வேண்டுமெனில் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.
திருவாரூர் காட்டூரில் கலைஞருக்கு 3 ஏக்கரில்அருங்காட்சியகம் அமைக்கப்படும், அதற்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தின்போது அந்த அருங்காட்சியகம் தொடங்கப்படும் எனவும் அவர் கூறினார்.