முன்னாள்பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் தண்டனை குறைக்கப்பட்டவர்களாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட்பாயஸ், ஜெயக்குமார் என 7 பேர் வேலூர் மத்திய சிறை, புழல் சிறை, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

 Murugan's struggle in prison.. request to the governor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இவர்கள், நாங்கள் அதிக ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டோம், இந்திராகாந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களே, முழு தண்டனையை அனுபவிக்காமல் வெளியில் வந்துவிட்டார்கள், நாங்கள் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்துவிட்டோம், 3 வது ஆயுள் தண்டனையை அனுபவித்துவருகிறோம் என நீதிமன்றத்தின் கதவை தட்டினார்கள். உச்சநீதிமன்றம், இவர்கள் விடுதலை தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநில அரசே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துவிட்டது.

 Murugan's struggle in prison.. request to the governor

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இதனை தொடர்ந்து தமிழகத்தின் பெரும்பான்மை அரசியல் கட்சிகளின் நெருக்கடியால் கடந்த 2018 செப்டம்பர் 9ந்தேதி தமிழக அமைச்சரவை கூடி, 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தீர்மானம் இயற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைத்தது. அவர் அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் வைத்துள்ளார்.

கவர்னர் முடிவு எடுக்க வேண்டும்மென தமிழகத்தில் உள்ள காங்கிரஸ், பாஜக உட்பட சில கட்சிகளை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் வலியுறுத்தியும் கடந்த 5 மாதங்களாக எந்த முடிவும் எடுக்காமல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனே முடிவு எடுக்க வேண்டும்மென முருகன், கடந்த வாரம் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். அவரது வழக்கறிஞர் புகழேந்தி வருகை தந்து சமாதானம் செய்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இந்நிலையில் பிப்ரவரி 5ந்தேதி சிறையில் முருகனை சந்தித்துவிட்டு வந்த வழக்கறிஞர் புகழேந்தி, சிறைக்குள் கடந்த 4 நாட்களாக முருகன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்கிற தகவலைச்சொன்னவர், வழக்கு தொடுத்தபோது சிபிஐ, நளினி, முருகன் இருவரிடமும் 3 மணி நேரம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளனர். இதனை நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துள்ளனர். தற்போது எங்களை மீண்டும் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்துங்கள், எங்களுக்கும் அந்த கொலைக்கும் சம்மந்தம்மில்லை எனக்கூறியுள்ளார். என்றவர் தங்களது விடுதலை தொடர்பாக கவர்னர் முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே உண்ணாவிரதம் இருந்துவருகிறார் என்றார்.

​உண்ணாவிரதம் இருப்பதை சிறைத்துறை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.