வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கில் முருகன் விடுதலை!

Murugan released in video call case abroad!

சிறையில் இருந்து வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கில் முருகன் விடுதலை செய்யப்பட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள முருகன் கடந்த 2020- ஆம் ஆண்டு வெளிநாட்டிற்கு வீடியோ கால் மூலம் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் ஓராண்டாக நடைபெற்று வந்த நிலையில், முருகனே நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் வாதாடி வந்தார். இந்த வழக்கு தொடர்பாக, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது.

இதையடுத்து, அரசு தரப்பில் போதிய அளவு சாட்சியங்கள் இல்லாத காரணத்தால், வழக்கில் இருந்து முருகன் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

case incident
இதையும் படியுங்கள்
Subscribe