மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடு நாளை நடைபெற இருக்கும் நிலையில், மதுரை சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை வீடு மாதிரி செட்களில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''ஆறுபடை வீடுகளும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அப்படி இங்கு இன்று முருகன் மாநாட்டுத் தலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி. ஒட்டுமொத்தபாரதத்திற்குசிவனே கடவுள். அதனால் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என சொல்கிறார்கள். முருகனேமுழுமுதற் கடவுள். அவனே நம் அடையாளம்'' என்றார்.