முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டிப் பெருவிழா கடந்த திங்கட்கிழமை துவங்கியது. முருக பக்தர்கள் பலரும் முருகன் கோவில்களில் காப்பு கட்டி கடும் விரதமிருந்து அங்கேயே தங்கி தரிசனம் செய்து வந்தனர். கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி சூரசம்ஹாரம். இந்நிகழ்ச்சி அனைத்து முருகன் கோவில்களிலும் வெகுகோலாகலமாக நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/MURUGAN444.jpg)
ஆறாம் படை வீடான அழகர்கோவில் பழமுதிர்சோலை ஸ்ரீமுருகன் கோவிலிலும் சூரசம்ஹாரம் நடந்தது. தன் தாயிடமிருந்து வேலை வாங்கி சூரனை வதம் செய்தார் முருகன். இதனைத் தொடர்ந்து பரம்பரை உபயதாரரான கள்ளந்திரி கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் விழா குழுவினருக்கு தேவஸ்தானம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமணன் குடும்பத்தினர் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thalai koyyappadukiradhu111.jpg)
நத்தம், திண்டுக்கல், விருதுநகர், மேலூர், பொன்னமராவதி உட்பட மதுரையைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
Follow Us