திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. கடையின் சுவரை துளை போட்டு இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளையில் பிரபல கொள்ளையன் முருகனுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

Advertisment

theft

திருச்சியில் கொள்ளை நடந்து 55 நாட்களுக்கு பிறகு திருச்சி போலீசிடம் சிக்கியிருக்கும் முருகனை காவலில் எடுக்கக் கோரும் மனுவை நீதிமன்றத்தில் இன்று திருச்சியில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அப்போது நேரில் ஆஜர்படுத்தப்பட்ட முருகனிடம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Advertisment

அதேபோல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முருகன் வந்தபோது அங்கே வந்திருந்தமுருகனின் மனைவி மற்றும் மகனை பார்த்த முருகன் கண் கலங்கினான்.