காவிரி ஆற்று  மணலில் 12 கிலோ தங்க நகையை மறைத்து வைத்த கொள்ளையன் முருகன்..!

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் கடந்த ஒன்றாம் தேதி நள்ளிரவில் சுவற்றில் சுவற்றை துளை போட்டு 13 கோடி மதிப்புள்ள தங்கம் வைரம் பிளாட்டினம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து திருச்சி டிசி மயில்வாகனம் தலைமையிலான தனிப்படை விசாரித்து வந்தனர் .

இந்த நிலையில் இன்று காலை முருகனை ரகசியமாக அழைத்து வந்த பெங்களுர் போலீசார் திருவரம்பூரில் முருகன் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துசென்று அங்கு மறைத்து வைத்திருந்த நகைகளை கைப்பற்றி மீண்டும் காரில் பெங்களுர் சென்று கொண்டிருந்தனர்.

Murugan, a 12 kg gold jewel hidden in the sands of the river Cauvery

இந்த நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பிக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐ.ஜி. வரதராஜீலு உத்தரவின் பெயரில் அதிரடியாக உளவுப்படையை தூரிதப்படுத்தி பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே ரகசியமாக சென்ற முருகன் மற்றும் ஆகியோரை பெரம்பலூர் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் மற்றும் திருச்சி தனிப்படை அதிகாரி திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன், பெரம்பலூர் டி.எஸ்.பி கோபால்ராஜ் வழிமறித்து கைப்பற்றபட்ட நகைகள் திருச்சி நகைகள் இருக்கிறதா? என்று விசாரிக்க விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பாக தகவல் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில்

இந்த விசாரணையில் தினமும் ஒரு அப்டேட் கைது, சரண்டர், சிறை என்று மாறிமாறி வந்து கொண்டிருந்த நிலையில் திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் செய்தி குறிப்புவெளியிட்டுள்ளார்.

Murugan, a 12 kg gold jewel hidden in the sands of the river Cauvery

அந்த செய்திக்குறிப்பில் திருவாரூரைச் சேர்ந்த மணிகண்டன் கைது செய்து 4 கிலோ 250 கிராம் நகைகள் கைப்பற்றியும் திருடுவதற்கு பயன்படுத்திய இருசக்கரவாகனம் ஒன்றையும் கைப்பற்றினார்கள். கனகவள்ளி என்பவரை கைது செய்து 450 கிராம் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 1கோடியே 76 இலட்சத்து 25,000 ரூபாய் ஆகும்.

மேலும் இதில் தொடர்புடைய சுரேஷ் முருகனை தேடிய நிலையில் சுரேஷ் திருவண்ணமலை செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் முருகன் பெங்களூர் 2வது A.C.MM. சிட்டி சிவில் கோர்ட்டில் சரணடைந்தான்.

Murugan, a 12 kg gold jewel hidden in the sands of the river Cauvery

இதனையடுத்து அங்குள்ள பொம்மனஹள்ளி பெங்களூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 11.10.2019 முதல் 16.10.2019 வரை போலீசார் 6 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இதில் முருகன் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூர் போலீசார் இன்று காலை திருச்சி வந்தனர் திருச்சி தனிப்படை போலீசார் உடன் சேர்ந்து முருகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சி திருவரம்பூர் பூசை துறை காவேரி படுக்கை அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 12 கிலோ நகைகளை கைப்பற்றினர். இந்த நகைகள் பெங்களூர் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்பு திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Investigation police Robbery thiruchy
இதையும் படியுங்கள்
Subscribe