ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முருகன். கடந்த 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி அன்று முருகன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை கூறியது. இதையடுத்து முருகன் தனிமைச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murugan1_16.jpg)
சிறையில் இருந்து செல்போன் பறித்ததாக தம்மீது வேண்டுமென்றே வீண் பழி சுமத்தி, தனிமைச்சிறையில் அடைத்துள்ளனர் என்று கூறி, தன்னை சென்னை புழல் சிறைக்கு மாற்றவேண்டும் எனக்கோரி, கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் முருகன். ஐந்தாவது நாளாக இன்றும் உண்ணாவிரதத்தை அவர் தொடர்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)