Skip to main content

பழநி முருகன் கோவிலில் தைப் பூசம் கொடி ஏற்றம்!

Published on 16/01/2019 | Edited on 16/01/2019
t

 

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

 

 முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த தைப்பூசத்திற்காக  காரைக்குடி, தேவகோட்டை, மேலூர்,  மதுரை, திருச்சி, தேனி, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் உள்பட பல பகுதிகளில் இருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசித்து செல்வது வழக்கம்.  அதுபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

t

 

 இந்த விழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து தெற்கு ரத வீதி மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜை பெரியநாயகி அம்மன் கோவில் முன்புள்ள தீபஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.   இந்த தைப்பூசம் விழா பத்து நாட்கள் நடைபெறும்.

 

t

 

 இந்த திருவிழாவில் முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை புண்ணியாக வாசனம் மதிய உறக்கம் நடைபெறும்.  கொடிப்படம் நான்கு ரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சியும் முத்துக்குமார சுவாமி மண்டபத்தில் முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்று கொடி படத்துக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.  அதன் பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.  அதன்பின்னர் விநாயகர்  பூஜை கஜ பூஜை  தீபாராதனையும் நடைபெற்றன.  அதன் பின் கொடியேற்றம் நடைபெற்றது.  இதில் முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அரோகரா கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

 

t


.      இந்த விழாவில் வருகிற 20-ஆம் தேதி திருக்கல்யாணமும் 21ஆம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெற இருக்கிறது.   அதைத்தொடர்ந்து 24 ம் தேதி தெப்ப உற்சவத்துடன் தைப்பூசம் திருவிழா பழநியில் நிறைவு பெறுகிறது. 


   இந்த தைப்பூச கொடியேற்று விழாவில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ்,  துணை ஆணையர் செந்தில்குமார்,  அலுவலக மேலாளர் உமா, செயற்பொறியாளர் சக்திவேல்,  சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர் சிவனேசன்,  உரிமையாளர் செல்வகுமார் மற்றும் பழனி நகராட்சி ஆணையாளர் நாராயணன், டிஎஸ்பி விவேகானந்தன் உள்பட அதிகாரிகளும் பழனி நகர் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பழனி : ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Palani: Important announcement by temple administration regarding rope car service

 

பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை இன்று (29.11.2023) ஒரு நாள் மட்டும் இயங்காது எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

 

Next Story

‘பழனிக்குச் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு’ - கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

Published on 28/11/2023 | Edited on 28/11/2023

 

Attention to devotees going to Palani Important notice from the temple

 

பழனி முருகன் கோயிலில் செயல்பட்டு வரும் ரோப் கார் சேவை குறித்து கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கோயிலில் தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பக்தர்கள் எளிதாக மலைக்குச் சென்று முருகனை வழிபட கம்பிவட ஊர்தி (Rope Car) வசதி செய்யப்பட்டுள்ளன.

 

இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நாளை (29.11.2023) ஒரு நாள் மட்டும் இயங்காது என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை மற்றும் மின் இழுவை ரயிலை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.