mu

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை நவம்பர் 27ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்தது உயர்நீதிமன்றம். மேலும், அதுவரை காவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது உயர்நீதிமன்றம்.

சர்கார் படத்தில் அரசு முத்திரை உள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி வருகிறது என்று தேவராஜ் என்பவரின் புகாரை அடுத்து, முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணையை அடுத்து நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.