கணவர் தவறான உறவில் இருந்ததை கண்டு தட்டிக்கேட்ட மனைவியை ரகசிய காதலியுடன்கணவரேகழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த வீடியோ வெளியாகி பெண் செயற்பாட்டாளர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பை அடுத்த கிழக்கு காப்பிலிபட்டியை சேர்ந்தவர் சற்குணம். அவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் சற்குணம் வீராசின்னம்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்ற பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக அடிக்கடி சற்குணத்திற்கும் சரண்யாவிற்கும் இடையேதகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஈஸ்வரியை வீட்டிற்கே அழைத்து வந்த சற்குணத்தை சரண்யா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சற்குணம்சரண்யாவை ஈஸ்வரியுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார்.இப்படி அவர் தாக்கும்வீடியோ அங்குள்ள இளைஞரால் எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த கொலைவெறி தாக்குதலில் சிக்கிய சரண்யா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி தவறான உறவிற்காக பெண் தாக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பெண் செயற்பாட்டாளர்கள், பெண்ணிய சிந்தனையாளர்கள்மத்திய இந்த செயல்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.