Advertisment

டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகி வெட்டிக்கொலை

Murder

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம், அச்சரப்பாக்கம் நகர செயலாளராக இருந்தவர் பாலமுருகன். டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான இவர் அச்சரப்பாக்கத்தில் டீக்கடை நடத்தி வந்தார். பாலமுருகன் திங்கள்கிழமை காலை தன்னுடைய டீக்கடையை திறந்தார். சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பாலமுருகனை கத்தி, அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இச்சம்பவம் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த டி.டி.வி.தினகரன் கட்சி நிர்வாகிகள் வாசுதேவன், கோதண்டபாணி, சங்கர், உத்தமன் உள்பட பலர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க மதுராந்தகம் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. முன்விரோதத்தில் பாலமுருகன் கொல்லப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe