Advertisment

மச்சினி காதலை ஏற்காத மாமன் கொலை... குற்றவாளிகளை தேடிவரும் காவல்துறையினர்!! 

The murder of the uncle who did not accept the love of Machini ... The police who are looking for the culprits

விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், புதுச்சேரி அருகேயுள்ள கோட்டக்குப்பத்தை அடுத்த சின்ன கோட்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (31). இவர் அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் வெட்டுக் காயத்துடன் சாலையில் கிடந்தார். அவரைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்குத் தகவல் கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வகுமார் உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செல்வகுமாரின் மச்சினி லதா என்பவரை அதே பகுதியில் வசிக்கும் குப்புசாமி (27) என்பவர் காதலித்து வந்ததாகவும், இது பிடிக்காத செல்வகுமார் மச்சினி லதாவை மரக்காணம் பகுதியில் உள்ள ஒருவருக்கு நிச்சயம் செய்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குப்புசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்வகுமாரை குடிப்பதற்கு அங்குள்ள முந்திரி தோப்பிற்கு அழைத்துச் சென்று குடிபோதையில் இருந்த செல்வகுமாரின் தலை மற்றும் உடம்பில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

Advertisment

இதில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தக் காதல் விவகாரத்தால் கொலை நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் அஜய் தங்கம் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து கோட்டக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவுசெய்து குற்றவாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.

love incident villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe