Advertisment

தமிழிசைக்கு கொலை மிரட்டல் 

isai

தமிழ்மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அம்மனுவில், 23 ந்தேதி காலை 11.45 மணிக்கு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஒரு தபால் பெறப்பட்டது. 17.2.2018 தேதியிட்ட அந்த கடிதத்தில் திருமா அலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற சங்கம் அரியலூர் மாவட்டம் என்ற முகவரியுடன் இலக்கிய தாசன் என்ற திருமா அலை, ஜாகீர் உசேன், முபாரக் அபி, கணபதி ஆகிய 4 பேர் கையெழுத்துடன், உடையார் பாளையம் தபால் முத்திரை தேதியுடன் அந்த கடிதம் வந்திருந்தது.

Advertisment

அந்த கடிதத்தில், தாங்கள் வரும் 23–ந்தேதி அன்று பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டான், உடையார்பாளையம் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக விவரம் அறிந்தோம். நீங்கள் எங்கள் கட்சியின் தலைவரை பற்றி தரம் இல்லாத வார்த்தைகளை பேசி இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வரக்கூடாது. மீறி வந்தால், தங்களுடைய உயிர் பிரிந்து விடும். நீங்கள் வர வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது.

Advertisment

மேற்கண்ட வகையில் எங்கள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மீது கொலை மிரட்டல் விடுத்தும், கட்சி பணியை செய்ய விடாமல் இடையூறு செய்த அந்த நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

Murder threat to Tamils
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe