Skip to main content

தமிழிசைக்கு கொலை மிரட்டல் 

Published on 24/02/2018 | Edited on 24/02/2018
isai

 

தமிழ்மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.   அம்மனுவில், 23 ந்தேதி காலை 11.45 மணிக்கு பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் ஒரு தபால் பெறப்பட்டது. 17.2.2018 தேதியிட்ட அந்த கடிதத்தில் திருமா அலை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் முன்னேற்ற சங்கம் அரியலூர் மாவட்டம் என்ற முகவரியுடன் இலக்கிய தாசன் என்ற திருமா அலை, ஜாகீர் உசேன், முபாரக் அபி, கணபதி ஆகிய 4 பேர் கையெழுத்துடன், உடையார் பாளையம் தபால் முத்திரை தேதியுடன் அந்த கடிதம் வந்திருந்தது.

 

அந்த கடிதத்தில், தாங்கள் வரும் 23–ந்தேதி அன்று பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டான், உடையார்பாளையம் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக விவரம் அறிந்தோம். நீங்கள் எங்கள் கட்சியின் தலைவரை பற்றி தரம் இல்லாத வார்த்தைகளை பேசி இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வரக்கூடாது. மீறி வந்தால், தங்களுடைய உயிர் பிரிந்து விடும். நீங்கள் வர வேண்டாம் என்று கூறப்பட்டு இருந்தது.

 

மேற்கண்ட வகையில் எங்கள் மாநில தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் மீது கொலை மிரட்டல் விடுத்தும், கட்சி பணியை செய்ய விடாமல் இடையூறு செய்த அந்த நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

மூன்று நாட்களாக கொலை மிரட்டல்- ட்விட்டரில் ஜிக்னேஷ்

Published on 09/06/2018 | Edited on 10/06/2018

கடந்த தேர்தலில் குஜராத்தின் வத்காம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுயேட்சையை சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவனிக்கு பிரபல ரௌடியின் மூலம் கொலை மிரட்டல் விடப்பட்டதாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


 

threat

உமர் காலித் - ஜிக்னேஷ்

 

 

இது சம்மந்தமாக காவல்துறையில் எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜிக்னேஷுக்கு கொலை மிரட்டல் விட்ட நபரையும், என்ன பேசினார்கள் என்பதையும் ட்வீட்டரில் பதிவேற்றினார்.

நேற்றும் இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததில் மூன்று நாட்களை தொடர்ந்து இன்றும் ரவி பூஜாரி என்னும் ரௌடியினால் கொலை மிரட்டல் விடப்பட்டுத்தான் உள்ளது. 

"எனக்கு மிரட்டல் விடுவது என்பது அரசின் சதியா? பூஜாரியை வைத்து எங்களை கொல்வதனால் பாஜகவின் வேலையை சுலபமாக முடிந்துவிடும். இதன் மூலம் அம்பேத்கரியத்தை மிரட்டப் பார்க்கிறார்கள் என்று அதில் தெரிவித்துள்ளார். 

 

 


மேலும் இன்னுமொரு ட்வீட்டில் மூன்று நாட்களாக எனக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணமாக இருக்கிறது. ரவி பூஜாரியே ஆஸ்திரேலியாவில் இருந்து கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். மேலும் அந்த லிஸ்டில் உமர் காலித் எனும் JNU கல்லூரி மாணவரும் இருப்பதாக அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

உமர் காலித் என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்   தலைவராக உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இவரை தலைமறைவு தாதா என்று தன்னை அழைத்து கொள்ளும் ரவி பூஜாரி என்பவர் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக காவல்துறையில் புகார் அளித்தார். 

 

 

உமர் காலித் தன் ட்விட்டரில் இது பற்றி பதிவிட்ட போது, தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் 'நானும், ஜிக்னேஷும் அவரது ஹிட்லிஸ்டில் இருக்கிறோம். இதே நபர்தான் என்னை 2016 ஆம் ஆண்டும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்' என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

     

Next Story

மொட்டைக் கடுதாசியால் சிக்கிய கொலைகாரன்! - மூன்றாண்டு வழக்கின் பின்னணி..

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

சென்னையையே பரபரப்பில் ஆழ்த்தியது அந்தக்கொலை. பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு சென்றது ஒரு கும்பல். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகியும் எந்தவிதத் தகவலும் இல்லாததால் கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு, ஒரு மொட்டைக் கடுதாசியால் முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

 

Murder

 

மே 28, 2015ஆம் ஆண்டு சென்னை போரூரில் உள்ள லஷ்மி நகரைச் சேர்ந்த குளோரி (60) என்ற பெண்ணின் வீட்டிற்குள், வாட்டர் பியூரிஃபையர் விற்பதாகக் கூறிக்கொண்டு நுழைந்தது மூன்று பேர் கொண்ட கும்பல். நுழைந்த வேகத்தில் குளோரியைக் கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களைத் திருட ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த குளோரியின் மருமகள் சரளா, குளோரியின் கை, கால்கள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஓடிவந்திருக்கிறார். இதைக் கண்ட அந்த கும்பல் சரளாவைத் தாக்கிவிட்டு, குளோரியின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, 4 சவரன் நகையுடன் அங்கிருந்து தப்பியோடியது.

 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மொட்டைக் கடுதாசி காவல்நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தை வாசித்த காவலர்கள் அதே சூட்டோடு அம்பத்தூர் துணை ஆணையர் சர்வேஷ்ராஜுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அந்தக் கடிதத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியசெல்வம் (40) குடிபோதையில் ‘தான் எப்படி குளோரியைக் கொலை செய்தேன்’ என்பதை விளக்கியதாக எழுதியிருந்தார்.

 

இதையடுத்து, ஆரோக்கியசெல்வம் கைது செய்யப்பட்டு, கூடுதல் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார். அவர் டாக்ஸி டிரைவராக இருந்ததும், திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.