''சண்டைக்காரனுங்க இரண்டுபேரும் ஒதுங்கிடுவானுங்க, விளக்கிவிட போனவங்க பலியாகிடுவாங்க'' என்கிற கிராமத்து பழமொழி திருவாரூரில் நடந்த சம்பவத்தில் உறுதியாகியுள்ளது. மது போதையில் இரண்டுபேர் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது தடுக்கச் சென்ற இளைஞர் ஒருவர் அரிவாளால் வெட்டுப்பட்டு இறந்தார்.

Advertisment

murder

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பில் தங்கப்பாண்டி மற்றும் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பனான மணிமாறன் என்கிற முத்துவிற்கும் சில நாட்களாாக முன்விரோதம் இருந்து வந்ததுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தங்கபாண்டிக்கும் மணிமாறனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisment

ஒரு கட்டத்தில் தகராறு முற்றி மதுபோதையில் இருந்த தங்கப்பாண்டி மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மணிமாறனை வெட்ட பாய்ந்திருக்கிறார்.அப்போது அங்கு அருகில் நின்று கொண்டிருந்த பால்பாண்டி (31), பிரபாகரன், ரவி, பிரகாஷ், ஆகியோர் இந்த தகராறை தடுக்க முயன்றனர். அதில் தங்கப்பாண்டி, பால்பாண்டியை தான்வைைத்திருந்த அரிவாளால் வெட்டியுள்ளார். மேலும் அங்கு நின்றிருந்தவர்கள் மீதும் அரிவாளைக்கொண்டு தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பால்பாண்டியை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பால்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

31 வயது நிரம்பிய பாண்டிக்கு சித்ரா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த கொலை சம்பவம் நெய்விளக்கு தோப்பு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.