தற்போது உள்ள சூழ்நிலையில் குடும்ப உறவுகளுக்கு இடையே இருக்கும் பாசம், எல்லாம் காணமல் போய்விடுகிதோ என்கிற எண்ணம்தோன்றும் வகையில்முசிறியில் நடைபெற்ற சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சீலைபிள்ளையார் புதூரில் மகளுடன் வாழ மறுத்த மருமகனை வெட்டி கொன்ற மாமனார் காட்டுப்புத்தூர் போலீசில் சரணடைந்தார்.
தொட்டியம் தாலுகா சீலைபிள்ளையார் புதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மீன் வியாபாரி. இவரது மகள் வனிதா (23). அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி மாணிக்கம் என்கின்ற பிச்சாண்டி என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் வனிதாவிற்கும் மாணிக்கத்துக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே கடந்த ஒரு வருடமாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இருவருக்கும் இடையே பலமுறை சமரசம் செய்தும் மாணிக்கம் மனைவியுடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனிதாவின் தந்தை மாணிக்கம் இன்று தனது உறவினர்களுடன் சேர்ந்து சீலைபிள்ளையார் புதூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற மாணிக்கத்தை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் காட்டுப்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்துபோன மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாமனார் மாணிக்கம் காட்டுப்புத்தூர் போலீசில் சரணடைந்துள்ளார். போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மாணிக்கத்தின் உறவினர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.