நெல்லை மாவட்டம் சீவலப்பேரி காவல் சரகத்தை சேர்ந்தது ராஜவல்லிபுரம் கிராமம். இந்த கிராமத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது மேலபாலாமடை கிராமம். இந்த கிராமத்தின் கலையரங்கம் முன்பு துண்டிக்கப்பட்ட ஒருவரின் தலை வீசப்பட்டிருந்தது. இன்று காலை விடிந்தததும் அதை கண்டுஅதிர்ச்சி அடைந்த ஊர் மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து நெல்லை மாவட்ட எஸ்பிஐ அருண்சக்தி குமார், தாழையூத்து டிஎஸ்பி பொன்ராஜ் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதைத்தொடர்ந்து மாவட்டதடயவியல்துறை டிஎஸ்பி ஆனந்தியும் அங்கே வரவழைக்கப்பட்டார். தலையை கைப்பற்றிய போலீசார் அதன் உடலை தேடிவருகின்றனர். அக்கம் பக்கம் உடல்காணப்படாததால் எங்கேயோ வைத்து கொலைசெய்து பின் தலையை வெட்டி எடுத்து இங்கே கொண்டுவந்து வைத்திருக்கலாம் என போலீஸ் தரப்பு சோர்ஸுகள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சகாயசாந்தி விசாரணையில் ஈடுபட்டுள்ளார். மேலும் போலீசார் இதுபற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய விசாரணையில் கொலைசெய்யப்பட்டவர் ராஜவல்லிபுரத்தினை சேர்ந்த மாரிமுத்து நாடார் மகன் பல்துறை(25) என்பது தெரியவந்தது. பால்துறை வேலையின்றி விடலையாக அழைபவராம். அதோடு அந்த பகுதியிலுள்ள இரண்டு மூன்று பேருடன் சேர்ந்து கஞ்சா அடிக்கும் பழக்கமும் கொண்டவராம்.இதனால் இந்த கொலை கஞ்சாதொடர்பாக நடந்த கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமாக என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் என்று போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.
தலையை அறுத்து வீசிய இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் பீதியை கிளப்பியிருக்கிறது. மேலும் உடல் இப்போதைய நிமிடம் வரை கிடைக்காமல் இருப்பது பரபரப்பை கூடியுள்ளது.