m

சூளகிரியில் பட்டப்பகலில் அண்ணன் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்த கார்பெண்டர், சரமாரியாக குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி கோட்டை தெருவைச் சேர்ந்தவர் மேகலப்பா. இவருடைய மனைவி பச்சியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மாதையன் (35). கட்டட தொழிலாளி. இரண்டாவது மகன் நாகராஜ் (28). கார்பெண்டர் வேலை செய்து வந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாயாருடன் வசித்து வந்தார்.

Advertisment

நாகராஜூக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திங்கள்கிழமை (ஜனவரி 28) காலை 6.30 மணியளவில், கோட்டை தெருவில் மாதையனும், நாகராஜூம் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது, திடீரென்று மாதையன் தனது தம்பியை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நாகராஜ், நிகழ்விடத்திலேயே இறந்தார். இதையடுத்து சடலத்தை இழுத்து வந்து வீட்டிற்கு முன்பு போட்டுவிட்டு, மாதையன் சூளகிரி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாதையன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

தம்பியை கொலை செய்த மாதையன் அளித்த வாக்குமூலத்தில், ''என் மனைவியிடம் நாகராஜ் அடிக்கடி தகராறு செய்து வந்தான். என் மனைவியின் கையைப் பிடித்து இழுப்பது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தான். இவ்வாறு செய்யக்கூடாது என பலமுறை அவனைக் கண்டித்தும் திருந்தவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் தம்பியை குத்திக் கொன்றுவிட்டேன்,'' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து மாதையனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் சூளகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.