style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஊராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் நடந்த விவசாயக்கூலி தொழிலாளி கொலை வழக்கில் இந்திய மனித உரிமை கட்சி தலைவர் உள்ளிட்ட 8 பேருக்கு ஆயுள் தண்டணை விதித்து சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றம் தீர்ப்பு.
சிதம்பரம் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது செட்டிக்கட்டளை ஊராட்சி. கடந்த 2011ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் செட்டிக்கட்டளை ஊராட்சிக்கு லட்சுமிகுடியைச் சேர்ந்த கலைவாணி என்பவரும், கொத்தவாசலையைச் சேர்ந்த லட்சுமி என்பவரும் போட்டியிட்டனர். இதில் கலைவாணி வெற்றி பெற்றார். இவரது கணவர் விஸ்வநாதன் இந்திய மனித உரிமை கட்சி தலைவராக உள்ளார். (இந்த கட்சி காங்கிரஸ் கட்சியின் தமிழகத்தின் முன்னாள் தலைவராக இருந்த மறைந்த எல்.இளையபெருமாள் காங் கட்சியில் இருந்து விலகி ஆரம்பித்த கட்சி)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த நிலையில் கலைவாணிக்கு எதிராகவும், சுமதிக்கு ஆதரவாகவும் தேர்தல் பணி செய்த லட்சுமிகுடியை சேர்ந்த விவசாயக்கூலி தொழிலாளி கோபால் மகன் புதுராஜன் (55)என்பருக்கும், கலைவாணி ஆதரவாளர்களுக்கும் விரோதம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 27.06.2012ம் ஆண்டு இரவு 10 மணியளவில் புதுராஜன் வீட்டருகே கலைவாணியின் ஆதரவாளர்களால் புதுராஜன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து அவரது மகன் ரமேஷ் புத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லட்சுமிகுடியை சேர்ந்த கலியபெருமாள் மகன் ஊசி என்கிற சவுந்திரராஜன்(44), ராமையன் மகன் விஸ்வநாதன்(45), விஸ்வநாதன் மனைவி கலைவாணி(38) (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்), மகாலிங்கம் மகன் கார்த்திகேயன்(34), கலியன் மகன் அறிவழகன்(42), ரெங்கசாமி மகன் அன்பழகன்(38), ஐயக்கண்ணு மகன் ராமசாமி(53), பழனிவேல் மகன் அறிவழகன், செட்டிக்கட்டளையை சேர்ந்த ஜெயராமன் மகன் கங்கை அமரன்(30) ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. வழக்கு நடந்து போது லட்சுகுடியை சேர்ந்த பழனிவேல் மகன் அறிவழகன் உடல்நலமின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் சவுந்திரராஜன், விஸ்வநாதன், கலைவாணி உள்ளிட்ட 8 பேருக்கும் ஆயுள் தண்டணை விதித்தும் அபராதமாக தலா ரூ2 ஆயிரம் விதித்தும் தீர்பளித்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் 8 பேரையும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு வழக்றிஞராக ஞானசேகரன் ஆஜரானார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});