Advertisment

நெல்லையில் பயங்கரம்: பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஹோட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு..!

hote s

நெல்லையில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத ஆத்திரத்தில் ஹோட்டல் உரிமையாளரின் நான்கு விரல்களையும், காலையும் வெட்டியதுடன் அவரது மனைவியின் கை விரலையும் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நெல்லை சுத்தமல்லி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் ஏழுபேர் கொண்ட ரவுடி கும்பல், பிரியாணி வாங்கிச்சென்றுள்ளனர். அதன் பின் அந்த கும்பல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வாங்கிய பிரியாணியை சாப்பிட பிரித்து பார்த்த போது அதில் லெக் பீஸ் இல்லை என ஆத்திரமுற்றுள்ளனர்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதன்பின், அந்த கும்பல் பிரியாணி வாங்கிய ஹோட்டலுக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது கடையில் உரிமையாளர் ஜாகீர்உசேன் மற்றும் அவரது மனைவி பானு இருவரும் இருந்தனர். அப்போது லெக் பீஸ் வைக்க மாட்டிய என ஆத்திரத்துடன் கேட்ட அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டியது.

hus

இதில் ஜாகீர்உசேன் தலையிலும் கையிலும் அரிவாளால் வெட்டுபட்டது. மேலும் அந்த கும்பல் அவரது வலதுவகையின் நான்கு விரல்களையும் துண்டித்தனர். அவரது மனைவியின் இடது கையிலும், காலிலும் வெட்டிவிட்டு அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிசென்றது.

இந்தச் சம்பவத்தில் ஆபத்தான நிலையில் இருவரும் நெல்லை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சமடைந்து உள்ளனர். நெல்லை சுத்தமல்லி பகுதி ரவுடிகளின் கூடாரமாக விளங்கி வருகிறது. அவர்களின் அட்டகாசம் தினம் தினம் அதிகரித்துவருகிறது. ஆனால், காவல்துறையினர் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே சுத்தமல்லியை சேர்ந்த சபரி, பேட்டையை சேர்ந்த சுடலைமுத்து ஆகியோரை காவல்துறையினர் பல்வேறு பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதில் தொடர்புள்ள சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

nellai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe