Advertisment

துப்பறிவாளன் பட பாணியில் மிஷினால் அறுத்து கொல்லப்பட்ட இளம்பெண் - சென்னையில் பயங்கரம்

m

Advertisment

சென்னை தெற்கு பகுதியில் உள்ள 12 மண்டலங்களில் இருந்து வரும் குப்பைகள் பெருங்குடியில் கொட்டப்படுகின்றன. ஒரு நாளைக்கு சராசரியாக 500 டன் குப்பைகள் இங்கு வந்து சேருகின்றன. கோடம்பாக்கம், மாம்பலம் பகுதியில் இருந்து வந்த குப்பையை பிரிக்கும் பணியில் இருந்தபோது, ஒரு கவரின் ஒரு பெண்ணின் கை, கால் பாகங்கள் இருந்தன. அந்தப்பெண்ணின் கை 30 வயது பெண் என்பதை சொல்கிறது. விபரம் அறிந்ததும் தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் மேற்கொண்டுள்ளனர்.

விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் கொடூர வில்லனான நடித்த வினய், மிஷினால் உடலை வெட்டுவது போல், இந்தப்பெண்ணின் உடல் பாகங்கள் மிஷினால் வெட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

m

Advertisment

காணாமல் போன பெண் குறித்த புகார்களை கொண்டு பெண் யார் என்பதும், கொலை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்தும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கை ரேகையை கொண்டு ஆதார் மூலம் முகவரியை தேடும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்ணின் கையில் உள்ள டாட்டூவை வைத்தும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதே போல் கடந்த 2 வருடங்களூக்கு முன்பு சென்னை ராமாபுரம் பகுதியில் உள்ள டி.எல்.எஸ். நிறுவனத்திற்கு எதிரே உள்ள குப்பைத்தொட்டியில் இளம்பெண்ணின் தலை வெட்டப்பட்ட நிலையில் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்ட சடலம் கிடந்தது. காதல் கணவனே மனைவியை கொலை செய்ததும், அந்தப்பெண் துணை நடிகை சசிரேகா என்பதும் பின்னர் தெரியவந்தது. அந்தப்பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்துதான் போலீசார் விசாரணையை தொடங்கி, கொல்லப்பட்ட பெண் யார் என்று கண்டுபிடித்தார்கள். அதே பாணியில் இந்த கையில் இருக்கும் டாட்டூவை வைத்தும் இளம்பெண் யார் என்பதை கண்டு பிடித்துவிடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்கள் போலீசார்.

murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe