Advertisment

உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேட்டு கடிதம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கேட்டு தமிழக மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

Advertisment

பல்வேறு காரணங்களால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் தாமதமாகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisment

MUNICIPALITY CORPORATION ELECTION NEED EVM STATE ELECTION COMMISSION WRITE LETTER

அதன் தொடர்ச்சியாக தான் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 4- ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும் நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

REQUEST IN LETTER EVM MACHINE State Election Commission Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe