"நகராட்சி வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டீசலுக்கு பில் பணத்தில் முறைகேடு செய்து மாதந்தோறும் ரூ.2 லட்சம் தரவேண்டும் என நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் மிரட்டியதாலே தற்கொலை முடிவினை எடுத்தேன். என் சாவிற்கு அவர்கள் இருவருமே காரணமாவார்கள்." என கடிதம் எழுதி வைத்து விட்டு, வியாழனன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் கடந்த 30 வருடங்களாக இராமேஸ்வரம் நகராட்சியில் குப்பை வண்டி ஓட்டி வந்த டிரைவர் நாகராஜன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Nagarajan.jpeg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
21 வார்டுகளைக் கொண்ட இராமேஸ்வரம் நகராட்சியில் ஆணையராக பணிபுரிவர் வீரமுத்து. சுகாதார ஆய்வாளரகப் பணிபுரிவர் அய்யப்பன். ஆன்மிக மற்றும் சுற்றுலாத் தலமான இராமேஸ்வரம் நகராட்சியில் காணும் இடமெல்லாம் குப்பைக் கூளங்கள்தான். இதனை சரி செய்ய ஜே.சி.பி, டிராக்டர், லாரிகள் மற்றும் குப்பை அள்ளும் இயந்திரங்கள் என 60-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உண்டு. இதற்கான பராமரிப்பு டீசல் செலவே மாதத்திற்கு ரூ.7 லட்சத்தினைத் தாண்டும். அனைத்து வாகனங்களுக்குமான டீசல் செலவினத்தொகையை மாதந்தோறும் கணக்கீட்டு, அதற்கான பில் தொகையை சரி செய்வது, சீனியர் டிரைவரான தற்கொலை செய்து கொண்ட டிரைவர் நாகராஜனின் கடமை. இந்த நிலையில், " டீசல் தொகையில் முறைகேடு செய்து மாதத்திற்கு ரூ.2 லட்சத்தினை தனக்கு வழங்க வேண்டுமென நகராட்சி ஆணையரும், சுகாதார ஆய்வாளரும் வற்புறுத்திக் கேட்டதாலேயே தற்கொலை முடிவிற்கு செல்ல வேண்டியிருந்தது." என கடிதம் எழுதி வைத்து விட்டு துளசி பவ மாடத் தெருவிலுள்ள தனது வீட்டிலேயே தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Letter (1)_0.jpeg)
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அவரது உறவினர்களோ., " கடந்த சில தினங்களாக நகராட்சி ஆணையர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக, கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்த நாகராஜன், இன்று காலை அவரது மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு அவர் மட்டும் வீடு திரும்பியுள்ளார். சிறிது நேரம் கழித்துவீட்டிற்கு திரும்பி வந்தஅவரது மனைவி, வீட்டினுள் சென்றபோது தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்தார் நாகராஜன். அருகில் இருந்த மேஜையில் காவல்துறைக்கு எழுதிய கடிதம் இருந்தது இதற்கு முழு காரணம் நகராட்சி ஆணையர் சுகாதார ஆய்வாளர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் வரை நாங்கள் உடலை வாங்க மாட்டோம்." என்றனர் அவர்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நகர் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து நகராட்சி அலுவலகத்திற்கு வந்து போலீசார் விசராணை செய்து வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் இருவரும் ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்று வரும் கூட்டத்தில் கலந்து கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)