சென்னை மாநகர காவல் நிலைய குளியலறைகளில் வழுக்கி விழும் சம்பவங்கள்! -மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

police

அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லருக்கு எதிராக புகார் அளித்த தேவேந்திரன் என்பவரை, அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, குளியலறையில் வழுக்கி விழுந்ததாக வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புதலைவர் ஜெயச்சந்திரன், வழக்கை எடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், சென்னை மாநகர காவல் நிலையங்களில் உள்ள குளியலறையில் வழுக்கி விழுந்த சம்பவங்கள் எத்தனையோ நடைபெற்றுள்ளன.

காவல்துறையினர் வழுக்கி விழுந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவா?

குளியலறைகளை முழுமையாகபராமரிக்காத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

குளியலறையில் வழுக்கி விழும் சம்பவங்களைதடுப்பதற்கு ஆணையர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? எனக் கேள்விகள் தொடுத்து, இவை தொடர்பாக, இரண்டு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

highcourt police
இதையும் படியுங்கள்
Subscribe