Municipal official suddenly suspended

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலராக உள்ளவர் அண்ணாதுரை. இவரை பேரூராட்சிகள் துறை நிர்வாக இயக்குனர் திடீரென்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் - பாண்டிச்சேரி சாலையில் உள்ளது வளவனூர். பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் சிறிய நகரமான இது, பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

Advertisment

இந்தப் பேரூராட்சி செயல் அலுவலராக அண்ணாதுரை என்பவர் தற்போது பணியாற்றி வந்துள்ளார். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பேரூராட்சிகள் துறை நிர்வாக இயக்குனர், அண்ணாதுரையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை அண்ணாதுரையின் வீட்டில் கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஒட்டப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து விசாரித்தபோது, உயரதிகாரியை ஒருமையில் பேசியது, சரிவர குடிநீர் விநியோகம் வழங்காதது, தரமற்ற முறையில் சாலைப் பணி மேற்கொண்டது உள்ளிட்ட புகார்களால் சஸ்பெண்ட் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலரை சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.