Skip to main content

சொத்துவரியை செலுத்தாவிட்டால் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டும் - அடையார் கேட் ஓட்டலுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
crown plaza

 

அடையார் கேட் ஓட்டல் ஒரு பகுதி சொத்துவரியையாவது செலுத்தாவிட்டால் மாநகராட்சி நடவடிக்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.


சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  அடையார் கேட்  நட்சத்திர ஓட்டல், கடந்த 2010, 2011ம் ஆண்டுக்களுக்கான 24,38,76,287 ரூபாய் சொத்து வரியை செலுத்தவில்லை என ஓட்டல் நுழைவாயிலில் கடந்த மார்ச் 20ஆம் தேதி  மாநகராட்சி  நோட்டீஸ் ஒட்டியது. அத்துடன் அடையாறு கேட் ஓட்டல் சொத்து வரி செலுத்தவில்லை என்று தண்டாரோ போட்டும்  தெரிவித்தனர். 


 இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரியும், சொத்துவரி தொடர்பாக தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி அடையார் கேட் ஓட்டல் இயக்குனர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 


இந்த வழக்கு நீதிபதி எம். துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓட்டல் நிர்வாகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ஓட்டல் முன் மாநகராட்சி அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துவிட்டு சென்றுவிடுகின்றனர், இதனால் விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு பெறும் பாதிப்பு ஏற்படுகிறது, ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களும் விடுதியில் தங்கியுள்ளனர்,  முதல் கட்டமாக 5 கோடி மட்டும் கட்ட தயராக இருப்பதாகவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க  வேண்டும் என கோரப்பட்டது. அறைகளின் எண்ணிக்கையில் கணக்கிடாமல், மொத்த கட்டிடத்தின் அடிப்படையில் வரி கணக்கிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டிநார்.


இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி, சொத்துவரி நிர்ணயிப்பது தொடர்பான நடைமுறைகளுக்கான அரசாணை பிறப்பிக்கும்போது ஓட்டல் சங்கங்களிடம் கருத்து கேட்டுதான் பிறப்பிக்கப்பட்டது, அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விதிகளை எதிர்த்து தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைக்கு இவர்கள் ஆஜராகவில்லை என தெரிவித்தார். 


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி "மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட பணம் இல்லாமல் தவித்து வருகின்றனர், இந்நிலையில் சொத்து வரி செலுத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது, எனவே குறைந்தபட்சமாக 10 கோடி ரூபாய் செலுத்த வேண்டும், இல்லாவிட்டால்  மாநகராட்சி நடவடிக்கையை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.24 கோடி ரூபாய் நிலுவையில்,10 கோடி ரூபாயை எப்போது செலுத்த முடியும் என்பது குறித்து அடையார் கேட் ஹோட்டல் நிர்வாகம் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நகராட்சி அலுவலகம் முற்றுகை; அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அதிரடி கைது

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

Municipal office siege; AIADMK MLAs arrested

 

கோவை மாட்டம், மேட்டுப்பாளையம் நகர்மன்றக் கூட்டம், அதன் தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நேற்று முன் தினம் (31-10-23) நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினர். அந்த வகையில், அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர், பொறியாளர்கள் வராதது குறித்தும், அவர்களது வார்டுகளில் குப்பைகளை அள்ளுவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர்.

 

இதில் அதிமுக மற்றும் திமுக க்வுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கவும் முயற்சி செய்தனர். அப்போது திமுக கவுன்சிலர் ஒருவர் கூட்ட அரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அதிமுக கவுன்சிலர்களை நோக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

 

மேலும், அதிமுக கவுன்சிலர்கள் சிலர் தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடக்கும் இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து அதிமுக மற்றும் திமுக என இரு கட்சியினரும் மேட்டுப்பாளையாம் காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், இன்று (02-11-23) போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக கவுன்சிலர்களுக்கு ஆதரவாக அதிமுகவினர் அதிகளவில் திரண்டு வர இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். இதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.செல்வராஜ் மற்றும் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில் அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அந்த இரு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்தனர். அதுமட்டுமல்லாமல், 3 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய 8 அதிமுக கவுன்சிலர்களையும் அதிரடி கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

 

Next Story

நியோமேக்ஸ் மோசடி வழக்கு; விசாரணை அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Neomax  case; The judge warned the authorities

 

நியோமேக்ஸ் எனும் நிதி நிறுவனம் நடத்தி பல்லாயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்களும் உள்ளன. அதிக வட்டி தருவதாகக் கூறி மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக நெல்லை, பாளையங்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கிளைகளை நிர்வகித்து வந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய சில நபர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் சிலர் ஒருதலையாக உள்ளனர் எனச் சந்தேகம் வருகிறது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கு நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘இதுவரை முக்கிய குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை. கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்’ எனத் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வழக்கறிஞர், ‘முக்கியமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்’ எனத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பிரதான குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, விசாரணை அதிகாரிகளின் தொலைப்பேசி தொடர்புகள் தேவைப்பட்டால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.