
திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளின் 35 வார்டுகளை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் மாநகராட்சியை ஆட்சி செய்து வருகிறது.இதில் 17 வது வார்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிரபல தொழிலதிபர் சர்வே ரத்தினத்தின் மகனான வக்கீல் வெங்கடேஷ் வாக்களித்த மக்களுக்காக குறைகளையும் கோரிக்கைகளையும், ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பி. மாவட்ட செயலாளர் ஐ..பி.செந்தில் குமார் ஆகியோர்களின் எடுத்து சென்று நிறைவேற்றி வருகிறார்.
அதேபோல் கடந்த தீபாவளி திருநாளை முன்னிட்டு தனது வார்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து தீபாவளி வாழ்த்து கூறினார். அதைத் தொடர்ந்து தான் தற்பொழுது தைப்பொங்கலை முன்னிட்டு மாநகராட்சி கவுசிலரான வக்கீல் வெங்கடேஷ் தனது வார்டில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா ஒரு சில்வர் பொங்கல் பானையுடன் கரண்டி, வெல்லம், தேங்காய், மஞ்சள் ஆகியவற்றை நேரடியாகச் சென்று வீடு வீடாக கொடுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.