Mumbai special police team has done it in Chennai

Advertisment

மும்பையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரை சென்னையில் கைது செய்துள்ளனர்.

மும்பையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் லலித் பாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு20 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ போதைப்பொருளை கடத்தியது தொடர்பாக கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து மும்பை சிறையில் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த 2 ஆம் தேதி சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது போலீசார் பிடியில் இருந்து லலித் பாட்டில் தப்பிச் சென்றுள்ளார். பின்னார் குஜராத் மற்றும் கர்நாடக மாநிலஙகளில் பதுங்கி இருந்துள்ளார். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் லலித் பாட்டில் சிறையில் இருந்து கொண்டே போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் செல்போன் சிக்னல் மூலம் லலித் பாட்டில் சென்னையில் இருப்பதை மும்பை தனிப்படை போலீசார் கண்டறிந்தனர். மேலும் அவர் 130 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை தயாரித்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் கடத்தல்காரர் லலித் பாட்டிலை சென்னையில் வைத்து மும்பை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.