natarajan

சசிகலாவின் கணவர் ம.நடராசன் மறைந்தார். அவரது மறைவு குறித்து திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள இரங்கல்:

Advertisment

’’அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலந்தொட்டே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர் ம. நடராசன் வாழ்நாள் இறுதி வரை ஒரு மொழிப் போராளியாகவும், இனப் போராளியாகவும், சீரிய சுயமரியாதைக் காரராகவும், பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தவர். திராவிட உணர்வின் மாறாத அடையாளமாகவும் திகழ்ந்தவர்.

Advertisment

அரசியலில் அவரின் நிலைப்பாட்டிற்கும் அவர் சிற்சில நேரங்களில் எடுத்த நிலைப்பாட்டிற்கும் மாறுபாடுகள் நமக்கு இருப்பினும், நட்பில் எப்போதும் நம்மிடம் மாறாத மாண்பாளர், தலை சிறந்த மனிதநேயப் பண்பாளர்; மருத்துவமனையில் நேற்று மாலை 6 மணிக்குசென்று நேரில் பார்த்தேன்.

சிறந்த இலக்கியவாதி, நல்ல எழுத்தாளர் பலரையும் ஆதரித்து உதவிய ஒரு கொடையாளி. ஈழத் தமிழர் பிரச்சினையில், அவர்களுக்காக முன்னின்று ஆதரவு தந்ததோடு, இனப்படுகொலையை உலகம் அறிந்து கொள்ளும் வரலாற்று சான்றாவணமாக்கிடும் தஞ்சையில் "முள்ளிவாய்க்கால் முற்றத்தை" அவர் அமைத்தது அவருடைய கொள்கை உணர்வுக்கு, காலங் கடந்து நிற்கும் வரலாற்றுச் சின்னமாகும். அதன் மூலம் என்றென்றும் அவர் வாழ்வார் என்பது உறுதி.

Advertisment

அவருடைய இழப்பு திராவிடர் சமுதாயத்திற்கே பெரும் இழப்பு! அவரை இழந்து வாடும் அவருடைய வாழ்விணையர் திருமதி சசிகலா மற்றும் அவரது சகோதரர், சகோதரிகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நமது ஆறுதலும், ஆழ்ந்த இரங்கலும் உரித்தாகுக! ’’