ADVERTISEMENT

142 அடியை எட்டியது முல்லைப்பெரியாறு அணை! பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை!!

09:34 PM Aug 15, 2018 | sakthivel.m

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேனி மாவட்டத்தில் இருக்கும் மேற்க்கு தொடர்ச்சி மலையில் உள்ள கேரள எல்லையில் அமைந்துள்ளது கர்னல் பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர் வரத்து மூலம் தென்தமிழகத்தில் உள்ள தேனி,திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீராகவும்,விவசாயத்திற்கும் பெரிதும் பயன்பட்டுவருகிறது.

இந்த நிலையில்தான் தற்பொழுது கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரளாவில் பெய்து வரும் தொடர் மலையால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஒரு கன அடி தண்ணீர் கூட வரவில்லை அதனால் கடந்த இருபது நாட்களாகவே முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடி தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் திடீரென நேற்று இரவு மேற்கு தொடர் மலை பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர் வரத்து வந்ததின் மூலம் இரண்டு அடி உயர்ந்து 138 அடியாக இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழைமூலம் 140அடியாக உயர்ந்து தற்பொழுது 142 அடியாக நீர் மட்டம் உயர்ந்து இருக்கிறது.

அப்படி இருந்தும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து வருவதின் மூலம் 142 அடிக்கு மேல் வரும் தண்ணீர் அணையில் உள்ள ஷட்டர்கள் வழியாக வெளியேறி வருகிறது. ஆனால் இப்படி வெளியேறும் தண்ணீர் எப்பொழுதும் இடுக்கி அணைக்கு போய் சேருவது வழக்கம் ஆனால் தற்பொழுது இடுக்கி அணையே நிரம்பி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேலும் தண்ணீர் வந்த வண்ணம் இருக்கிறது. அதனால் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் பகுதிகளில் உள்ள வண்டிப்பெரியார்,தேவி குளம் பகுதிகளில் ஆற்றையொட்டி குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு போக சொல்லி இடுக்கி மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கையும் விட்டு இருக்கிறார். அதுபோல் தற்பொழுது அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் எடுத்து வருவதால் லோயர்கேம் மற்றும் கூடலூர் பகுதிகளில் அணையை ஆற்றை ஒட்டி வசித்து வரும் மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு போக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் அறிவித்து இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு தற்பொழுது இரண்டாவது முறையாக அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து இருப்பதின் மூலம் தமிழக விவசாய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT