ADVERTISEMENT

 முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து  அதிகரிப்பு!

06:46 PM Aug 30, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

முல்லை பெரியார் மற்றும் வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 128 புள்ளி 20 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 1222 கன அடியிலிருந்து 1476 கன அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து பாசனத்திற்காக 200 குடிநீருக்காக 100 மற்றும் வைகை அணையில் தேடுவதற்காக ஆயிரத்து 250 கனஅடி என மொத்தம் ஆயிரத்து 550 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் பாசனத்திற்கு போக அணையை வந்து சேருகிறது.

இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து 1058 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து பாசனத்திற்காக 900 கன அடி மட்டும் குடிநீருக்காக 60 கன அடி நீர் என மொத்தம் 960 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது முதல்போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் ஏமாற்றத்தில் இருந்த விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பு ஒரு ஆறுதலாக உள்ளது. இதனால் விவசாய பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT