Advertisment

பெரியாறு அணை எப்பொழுதும் போல் பலமாக உள்ளது; அணைக்கு வரும் கேரளா வனப்பகுதி வல்லகடவு தகுதி அற்றதாக உள்ளது: குல்ஷன்ராஜ்

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை ஒன்பது மாதத்திற்கு பின் மத்தி மூவர் கண்காணிப்பு குழு தலைவர் குல்ஷன்ராஜ் தலைமையில் ஆய்வு செய்தனர்.

Advertisment

m

முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிப்பதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டு தோறும் அணைப் பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனைவழங்கும். இக் குழுவின் ஆலோசராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் உறுப்பினராக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகரன் அதுபோல் கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலாளர்

Advertisment

அசோக் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இக்குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆய்வு அதன் பின் ஒன்பது மாதத்திற்கு பின் அணையை ஆய்வு செய்தது . இக் குழுவினருடன் இம்முறை புதிதாக மத்திய நீர்வள இணை இயக்குநர் ராஜீவ் சிங்கால். மத்திய நீர்வள ஆணைய உதவி இயக்குநர் டாக்கி ஜெயின் கலந்து கொண்டனர்.

இக்குழு தலைவர் மற்றும் தமிழக தரப்பு உறுப்பினர் ஆகியோர் கேரளா வல்லகடவு வனப்பகுதி வழியாகமுல்லைப் பெரியாறு அணைக்கு வந்தனர். அது போல் கேரளா தரப்பினர் தேக்கடியில் இருந்து படகு மூலம் பெரியாறு அணைக்கு சென்றனர். கேரளாவில் நாளை

பருவமழை துவங்கலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்து அணை நீர்மட்டம் உயரும் போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

செய்தனர். அதன் பின் மெயின் அணை, பேபி அணை பகுதிகளை பார்வையிட்டனர். அது

போல் நீர்மட்டத்துக்குஏற்ப நீர் கசிவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அணையை ஒட்டியுள்ள

முதலாவது ஷட்டரை இயக்கி பார்த்தனர். அதுவும் சரியாக இருந்தது. அதன் பின் குமுளியில்

தமிழக கேரளா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பத்திரிக்கையாளர்கள்மத்தியில் பேசிய குல்ஷன்ராஜோ....முல்லைப் பெரியாறு அணை எப்பொழுதும் போல் பலமாக உள்ளது. நீர் கசிவும் திட்டமிட்டபடிதுள்ளிதமாக இருக்கிறது. அணைக்கு வரும் கேரளா வனப்பகுதி வல்லகடவு தகுதி அற்றதாக உள்ளது. அதனை கேரளா அரசு சீர்அமைக்க வேண்டும்.

பேபி அணையை பலபடுத்த அணையை சுற்றியுள்ள மரங்களை வெட்ட வேண்டும். 2000த்திலிருந்து துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் பெறுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கிறது என்று கூறினார்.இந்த ஆய்வில் தமிழக அரசு சார்பில் காவேரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

mullai periyaru dam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe